வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கால் ஆணி

இஞ்சிச் சாற்றுடன் நீர்த்த சுண்ணாம்பை கலந்து போட்டு வந்தால் கால் ஆணி குறையும்.

கீழாநெல்லியை அரைத்து பாதத்தில் தேய்த்து இரவு அப்படியே கட்டிவிட கால் ஆணி குறையும்.

மருதாணி வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி குறையும்.

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

பித்த மயக்கம் குறைய‌

துத்திக் கீரையை சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்த மயக்கம், வாந்தி போன்றவை குறையும்.

புதினா இலைகளை நீரில் வேக வைத்து, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.

பசலைக்கீரை சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு ஊற வைத்து, பொடியாக்கி சாப்பிட பித்தம் குறையும்.

புளிச்ச கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

சங்கன் இலைப் பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

தலைவலிக்கு

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

கைநடுக்கம் தீர

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

சூட்டுக்குத் தைலம்

அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

உடல் எடை கூட

பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

பசி உண்டாக

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கலந்து சாப்பிடவும்

சனி, செப்டம்பர் 10, 2011

இரத்த விருத்தி

காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் சுத்த தேன் கலந்து பருகிவர புது இரத்தம் உண்டாகும்

பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இரத்தம் ஊறும்

தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்

சம அளவு பொன்னாங்கண்ணி கீரை,கீழா நெல்லி இலைகளை எடுத்து அரைத்து,அதில் நெல்லியளவு எடுத்து பாலில் தினசரி இரவு அருந்தி வந்தால் இரத்த சோகை குறையும்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

கரிசலாங்கண்ணி இலை மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துப் பாலில் கரைத்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குறையும்.

திங்கள், செப்டம்பர் 05, 2011

உடல் குளிர்ச்சி பெற

நெருஞ்சில் விதை , கோதுமை , கொத்த மல்லி , சுக்கு, ஏலம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து சர்க்கரை சேர்த்து அருந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் .வள்ளைக்கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும் அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.